< Back
புதுச்சேரி
புதுச்சேரி
திருக்கனூர் தீயணைப்பு நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு
|14 Oct 2023 10:13 PM IST
திருக்கனூர் தீயணைப்பு நிலையத்திற்கு அமைச்சர் சாய்.சரவணன் குமார் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
திருக்கனூர்
திருக்கனூர் தீயணைப்பு நிலையத்திற்கு அமைச்சர் சாய்.சரவணன் குமார் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் தீயணைப்பு நிலைய தொலைபேசி ஏன் செயல்படவில்லை என கேட்டார். சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டதால் தொலைபேசி இணைப்பு வயர் துண்டிக்கப்பட்டதாகவும், தற்போது தொலைபேசி செயல்படுவதாகவும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஊழியர்களின் குடியிருப்பையும் பார்வையிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
ஆய்வின்போது புதுவை கோட்ட தீயணைப்புத்துறை அதிகாரி இளங்கோ, உதவி கோட்ட தீயணைப்புத்துறை அதிகாரி ரித்தோஷ் சந்திரா, திருக்கனூர் நிலைய அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.
-------