< Back
புதுச்சேரி
அமைச்சர் சந்திரபிரியங்கா அதிகாரிகளுடன்  ஆலோசனை
புதுச்சேரி

அமைச்சர் சந்திரபிரியங்கா அதிகாரிகளுடன் ஆலோசனை

தினத்தந்தி
|
8 Sept 2023 11:07 PM IST

நெடுங்காடு தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன், அமைச்சர் சந்திர பிரியங்கா ஆலோசனை நடத்தினார்.

கோட்டுச்சேரி

நெடுங்காடு தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன், அமைச்சர் சந்திர பிரியங்கா ஆலோசனை நடத்தினார்.

வளர்ச்சி பணிகள்

காரைக்கால் மதகடி காமராஜர் அரசு வளாகத்தில் உள்ள அமைச்சர் சந்திர பிரியங்காவின் அலுவலகத்தில் நெடுங்காடு தொகுதி வளர்ச்சிப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார். இதில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், செயற்பொறியாளர்கள் சிதம்பரநாதன், மகேஷ், வட்டார வளர்ச்சி அதிகாரி அருணகிரிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை உதவி இயக்குனர் மதன்குமார் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குடிநீர் வசதி

கூட்டத்தில் அமைச்சர் சந்திர பிரியங்கா பேசியதாவது:-

காரைக்காலில் மற்ற தொகுதிகளை ஒப்பிடும்போது நெடுங்காடு அதிக கிராமங்களை கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக இங்கு சாலைகள் அமைக்கப்படாமல் இருப்பதால் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் மதில்சுவர் கட்ட வேண்டும். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தரமான குடிநீர் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும். நெடுங்காடு தொகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ள ஹைமாஸ் விளக்குகளை மாற்றி அமைக்க வேண்டும். காளிக்குப்பம் இடுகாட்டுக்கு செல்லும் பாலத்தை சீரமைக்க வேண்டும். இந்த பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்