< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா உதவி
|3 Oct 2023 11:31 PM IST
நெடுங்காடு அடுத்த மணல்மேடு பகுதியில் வீடுகள் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா நல திட்டகளை வழங்கினார்.
நெடுங்காடு, அக்.4-
நெடுங்காட்டை அடுத்த மணல்மேடு பகுதியில் தீ விபத்தால் சில வீடுகள் சேதமடைந்தன.தகவல் அறிந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, மணல்மேடு பகுதிக்கு விரைந்து சென்றார். அங்கு தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் வழங்கினார். மேலும் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் வழங்கக்கூடிய நிதி உதவியையும் வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் துணை இயக்குனர் மதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.