படகு உரிமையாளருக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா ஆறுதல்
|கோட்டுச்சேரி அருகே தீ விபத்தில் நாசமான படகை பார்வையிட்டு படகு உரிமையாளருக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா ஆறுதல் கூறினார்.
கோட்டுச்சேரி
காரைக்காலை அடுத்த மண்டபத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு. இவர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் புதிய படகு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் படகின் முக்கிய பகுதியான மோல்டு செய்யப்பட்டு படகு கூட்டில் பொறுத்தப்படுவதற்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் படகு முற்றிலும் எரிந்து நாசமானது.
இதுபற்றி அறிந்த புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தீ விபத்தில் நாசமான படகை பார்வையிட்டு, உரிமையாளர் தென்னரசுக்கு ஆறுதல் கூறினார். அப்போது படகுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க முதல்-அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த நிகழ்வின்போது போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவ பஞ்சாயத்தார்கள் உடன் இருந்தனர்.