வேதபுரீஸ்வரர் கோவிலில் மாங்கனி திருவிழா
|புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் மாங்கனி திருவிழா நடந்தது. இதில் கோவில் வளாகத்தில் காரைக்கால் அம்மையார் மாங்கனி தேரில் வீதி உலா சென்றார்.
புதுச்சேரி
புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் மாங்கனி திருவிழா நடந்தது. இதில் கோவில் வளாகத்தில் காரைக்கால் அம்மையார் மாங்கனி தேரில் வீதி உலா சென்றார்.
வேதபுரீஸ்வரர் கோவில்
புதுச்சேரி காந்தி வீதியில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 63 நயன்மார்களுக்கு சன்னதி உள்ளது. இங்கு நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரும் வீற்றிருக்கிறார்.
காரைக்காலில் உள்ள அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவதுபோன்று வேதபுரீஸ்வரர் கோவிலிலும் மாங்கனி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
மாங்கனி திருவிழா
அதன்படி சிறுத்தொண்ட நாயனார் திருத்தொண்டு சபை சார்பில் வேதபுரீஸ்வரர் கோவிலில் 21-ம் ஆண்டு மாங்கனி திருவிழா இன்று நடைபெற்றது. விழாவையொட்டி வேதபுரீஸ்வரர், திரிபுர சுந்தரி மற்றும் காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.
அதைத்தொடர்ந்து மாங்கனிகளால் செய்யப்பட்ட தேரில், காரைக்கால் அம்மையார் சிறப்பு அலங்காரத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமாக மாங்கனிகள் வழங்கப்பட்டன.