மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா
|புதுவை மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
புதுச்சேரி
புதுவை மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
கொடியேற்றம்
புதுவை மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் மணக்குள விநாயகர் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த பிரம்மோற்சவ விழா அனுஞ்சை விக்னேஸ்வர பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு உற்சவ சாந்தி 108 சங்காபிஷேகத்துடன் 24 நாட்கள் நடைபெற்று நிறைவு பெறுவது வழக்கம்.
அதன்பட், இந்த ஆண்டு 63-வது பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் இன்று தொடங்கியது. காலையில் யானைக்கொடி ஏற்றப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
30-ந் தேதி தேரோட்டம்
பிரமோற்சவத்தையொட்டி நாள்தோறும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. அதுபோல இவ்விழாவின்போது தினமும் ஒரு வாகனத்தில் அதாவது வெள்ளி மூஷிக வாகனம், முத்து விமானம், முத்துப்பல்லக்கு, ரதோற்சவம், கடல் தீர்த்தவாரி, திருக்கல்யாணம் மற்றும் திருமுறை உற்சவ நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வருகிற 28-ந்தேதி சித்திபுத்தி விநாயகர் திருக்கல்யாணமும், 30-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது. 31-ந்தேதி கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், செப்டம்பர் 1-ந்தேதி வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் தெப்பல் உற்சவமும் நடக்கிறது.
7-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், 13-ந்தேதி 108 சங்காபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர, தேவஸ்தான அர்ச்சகர்கள் மற்றும் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.