< Back
புதுச்சேரி
மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது
புதுச்சேரி

மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

தினத்தந்தி
|
14 Oct 2023 9:59 PM IST

தவளக்குப்பம் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்,

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையத்தில் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தவளக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், தட்டாஞ்சாவடி கெங்கை அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 41) என்பதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதற்காக அவர் அரியாங்குப்பத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரிடம் கஞ்சா வாங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள், செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள அய்யப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்