< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மறைமலையடிகள் சாலையில் ஆண் பிணம்
|14 July 2023 9:44 PM IST
புதுவை மறைமலையடிகள் சாலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
புதுச்சேரி
புதுவை மறைமலையடிகள் சாலையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் நீலக்கலர் முழுக்கை சட்டை அணிந்திருந்தார். அவரது மார்பில் தயராணி என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.