< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மின்னொளியில் ஜொலிக்கும் சட்டசபை
|24 Oct 2023 10:48 PM IST
புதுவை விடுதலை நாளையொட்டி சட்டசபை மின்னொளியில் ஜொலிக்கிறது.
புதுச்சேரி
புதுவையின் விடுதலை நாள் விழா வருகிற நவம்பர் 1-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் முதல்-அமைச்சர் ரங்கசாமி கடற்கரை காந்தி திடலில் தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். புதுச்சேரியின் விடுதலை நாள் கொண்டாட்டத்துக்காக கடற்கரை சாலையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இரவு பகலாக ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அரசு கட்டிடங்களுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. புதுவை சட்டசபையில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.
மேலும் கவர்னர் மாளிகை, தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் மின் அலங்காரம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக புதுவை விழாக்கோலம் பூண்டு வருகிறது.