< Back
புதுச்சேரி
விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியை அமல்படுத்த வேண்டும்
புதுச்சேரி

விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியை அமல்படுத்த வேண்டும்

தினத்தந்தி
|
10 Sept 2023 10:01 PM IST

காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச்சங்க நிர்வாகிகள் நாஜிம் எம்.எல்.ஏ.யுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்திந்து வலியுறுத்தினர்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச்சங்க நிர்வாகிகள் காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ நாஜிமுடன் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியிடப்பட்டும் இதுவரை கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. மேலும் புதிதாக விவசாயிகளுக்கு கடன் வழங்கவும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மறுக்கின்றன. எனவே கடன் தள்ளுபடிக்கான அரசாணையை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்க கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதில் சங்கத்தலைவர் ராஜேந்திரன், இணை செயலாளர் சோமு. செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்