< Back
புதுச்சேரி
புதுச்சேரியில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி - சட்டப்பேரவையில் முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி - சட்டப்பேரவையில் முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

தினத்தந்தி
|
30 Aug 2022 10:35 PM IST

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய 13 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய முதல்-மந்திரி ரங்கசாமி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்படும் எனவும், மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் எனவும், மீனவர்களுக்கான டீசல் மானியம் லிட்டருக்கு 12 ரூபாய் வழங்கப்படும் எனவும் ரங்கசாமி அறிவித்தார்.

மேலும் புதுச்சேரியில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய 13 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். அதே போல் ரேசன் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு செயல்படுத்தப்படும் எனவும், 70 முதல் 80 வயது வரையிலான முதியோர் உதவித்தொகை 500 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.3,000 ஆக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் துப்புறவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என அழைக்கப்படுவர் என அறிவித்த ரங்கசாமி, புதிய சட்டப்பேரவை வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்