ரவுடிகளின் உதவியோடு மதுக்கடைகளை நடத்தக்கூடாது
|ரவுடிகளின் உதவியோடு மதுக்கடைகளை நடத்தக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியாங்குப்பம்
ரவுடிகளின் உதவியோடு மதுக்கடைகளை நடத்தக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நல்லுறவு கூட்டம்
அரியாங்குப்பத்தில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசார்-மதுபான விற்பனையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நல்லுறவு ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், கணேஷ், இனியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், திருமுருகன், நந்தகுமார், தமிழரசன் மற்றும் முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரையாம்புத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மதுபான விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
ரவுடிகளின் உதவியோடு...
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் பேசுகையில் 'அரசு அனுமதித்த நேர கட்டுப்பாட்டை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மதுபான கடைகளை ரவுடிகளின் ஆதரவோடு நடத்தக்கூடாது. கடைகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
தமிழகப் பகுதியில் இருந்து வந்து மது அருந்தும் நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இரவு நேரத்தில் கடைகளை பூட்டிச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரத்தில் பாதுகாப்பு பணிக்காக மதுக்கடைகளில் காவலாளிகளை நியமிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்குவோர் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வார இறுதி நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது' என்றார்