< Back
புதுச்சேரி
மதுபான கடைகள் திறப்பதை நிறுத்த வேண்டும்
புதுச்சேரி

மதுபான கடைகள் திறப்பதை நிறுத்த வேண்டும்

தினத்தந்தி
|
5 Oct 2023 12:00 AM IST

புதுவையில் மதுபான கடைகள் திறப்பதை நிறுத்த வேண்டும் என பா.ம.க. வலியுறுத்துகிறது.

புதுச்சேரி

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ம.க.வின் அவசர பொதுக்குழு கூட்டம் புதுவை கவுண்டன்பாளையம் அன்சாரி துரைசாமி நாயக்கர் உள்ளரங்கத்தில் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநில அமைப்பாளர் கணபதி பேசியதாவது:-

மத்திய மந்திரியாக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது பல்வேறு நல்ல திட்டங்களை புதுவை மாநிலத்துக்கு கொண்டுவந்தார். அவரது சாதனைகளை சொல்லி பா.ம.க.வுக்கு வாயப்பு கொடுக்க கிராமம்தோறும் திண்ணை பிரசாரம் செய்யவேண்டும். புதுவை மாநிலத்தில் பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி நடந்தால் புதுவை மாநிலம் முன்னேறும் என்றார்கள். அதுபோல் நடக்கவில்லை. அதிகாரம் இல்லாத சட்டமன்றம் புதுச்சேரிக்கு தேவையில்லை. சுற்றுலா என்ற பெயரில் மதுபான கடைகள் திறப்பதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கணபதி பேசினார்.

கூட்டத்தில் மாநில அளவில் கூட்டங்கள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது, தொகுதி, கிராம கூட்டங்கள் நடத்துவது, வாகன பிரசாரம் செய்வது, வாக்குச்சாவடி களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்