< Back
புதுச்சேரி
மதுபானம் விற்றவர் கைது
புதுச்சேரி

மதுபானம் விற்றவர் கைது

தினத்தந்தி
|
7 Jun 2023 10:15 PM IST

புதுவையில் புதிய பஸ் நிலையத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர் கைது.

புதுச்சேரி

புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதிய பஸ் நிலையம் அருகே நின்ற நபரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுது்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தபோது, அவர் உருளையன்பேட்டையை சேர்ந்த அஜய்குமார் (வயது 24) என்பதும், பீர், மதுபாட்டில்களை வாங்கி வெளியூர் பயணிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, ரூ.2,230 மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்