தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
|வாலிபர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுச்சேரி
வாலிபர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கொலை
புதுவை சண்முகாபுரத்தை சேர்ந்தவர் தமிழ்வாணன் (வயது 35). இவர் நெல்லிதோப்பு மார்க்கெட்டில் கோழிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவருக்கும், அங்குள்ள காய்கறி கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்யும் எல்லைப்பிள்ளைச்சாவடியை சேர்ந்த தேவா என்ற தேவநாதன் (42) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக இருவரும், அடிக்கடி மோதிக் கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந்தேதி அதிகாலையில் தமிழ்வாணன் நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தேவா அருகில் கிடந்த கல்லை எடுத்து தமிழ்வாணனின் தலையில் போட்டு கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவாவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு 3-வது குற்ற வியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு கூறப்படடது.
குற்றம் சாட்டப்பட்ட தேவநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜரானார்.