< Back
புதுச்சேரி
புதுவையிலும் லியோ திரைப்பட சிறப்பு காட்சி ரத்து
புதுச்சேரி

புதுவையிலும் 'லியோ' திரைப்பட சிறப்பு காட்சி ரத்து

தினத்தந்தி
|
18 Oct 2023 6:46 PM GMT

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் நடிகர் விஜய் நடித்த லியோ பட சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

புதுச்சேரி

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் நடிகர் விஜய் நடித்த லியோ பட சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

'லியோ' திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாகிறது. புதுச்சேரியில் லியோ திரைப்படத்தை காலை 7 மணிக்கு திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று வருகிற 24-ந் தேதி வரை காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

சிறப்பு காட்சி ரத்து

இந்தநிலையில் தமிழகத்தில் காலை 7 மணி சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டு, காலை 9 மணிக்குத்தான் லியோ படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுவையில் காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்து இருந்த போதிலும் ரத்து செய்யப்படுவதாக கடைசி நேரத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனார். எனவே, வழக்கம் போல் காலை 9 மணிக்குத்தான் புதுச்சேரி தியேட்டர்களிலும் லியோ திரையிடப்படுகிறது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி தியேட்டர் உரிமையாளர்களிடம் கேட்டபோது, 'தமிழகத்தில் சிறப்பு காட்சி கிடையாது என்பதால், புதுச்சேரியிலும் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

ரத்துக்கு காரணம் என்ன?

இதுபற்றி கலெக்டர் வல்லவனிடம் கேட்டபோது, புதுச்சேரி தியேட்டர் உரிமையாளர்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டனர். அதன்படி அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனவே தியேட்டர் உரிமையாளர்கள் காலை 7 மணி காட்சியை திரையிடுவதும், ரத்து செய்வதும் அவர்களது விருப்பம். அதில் அரசு தலையிட எதுவுமில்லை' என்றார்.

தமிழகத்தில் திரையிடப்படாத நிலையில் புதுவையில் மட்டும் காலை 7மணி சிறப்பு காட்சி திரையிட்டால் அடுத்து வெளியாகும் படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவோம் என்று அச்சுறுத்தியதன் காரணமாகவே தியேட்டர் உரிமையாளர்கள் இந்த முடிவை அதிரடியாக மேற்கொண்டதாக தெரியவருகிறது.

மேலும் செய்திகள்