இ பைல் முறையை ரத்து செய்யக்கோரி .வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
|இ பைல் முறையை ரத்து செய்யக்கோரி புதுவையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி
வழக்குகள் தொடர்பான ஆவணங்களின் விவரங்கள் எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக இ பைலை (ஆன்லைனில்) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறையில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும், எனவே இந்த முறையை ரத்து செய்துவிட்டு பழைய முறையை கொண்டு வர வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இ பைல் முறையை திரும்ப பெற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டை வலியுறுத்தி புதுவை வக்கீல்கள் சங்கம் சார்பில் இன்று காலை கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு நுழைவாயில் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் குமரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கதிர்வேல், பொருளாளர் லட்சுமி நாராயணன், இணை செயலாளர்கள் திருமலைவாசன், சதீஷ்குமார், வடிவரசன், சம்பத் மற்றும் நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.