வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
|புதுவையில் மத்திய அரசின் சட்டத்திருத்தங்களை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி
மத்திய அரசின் 3 சட்டத்திருத்தங்களை எதிர்த்தும், அந்த சட்டங்களில் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில் பெயர் மாற்றம் செய்ததை கண்டித்தும் தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 21-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நீதிமன்றங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ஆர்ட்டி சங்கர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாலசுந்தரம், இணை செயலாளர்கள் ஆனந்த், ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், பாலமுருகன், சந்தோஷ், புதுவை மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் அசோக்குமார் மற்றும் மூத்த வக்கீல்கள் பலர் கலந்துகொண்டு மத்திய அரசின் சட்ட திருத்தங்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.