< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
|23 Aug 2023 10:19 PM IST
சட்டத்திருத்தங்களில் இந்தியை திணிப்பதை எதிர்த்து வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள சட்ட திருத்தங்களில் இந்தி மொழியை திணிப்பதை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் தீர்மானத்தின்படி, புதுவை கோர்ட்டு முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை வக்கீல் சங்க செயலாளரும் தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் துணைத்தலைவருமான கதிர்வேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் பாலசுந்தரம், இணை செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், வடிவரசன், சந்தோஷ்குமார், செந்தில்குமார், பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.