< Back
புதுச்சேரி
கார் மரத்தில் மோதி வக்கீல் பலி
புதுச்சேரி

கார் மரத்தில் மோதி வக்கீல் பலி

தினத்தந்தி
|
18 Jun 2023 10:18 PM IST

சென்னைக்கு புறப்பட்டு சென்றபோது கார் மரத்தில் மோதியதில் வக்கீல் பரிதாபமாக இறந்தார்.

புதுச்சேரி

சென்னைக்கு புறப்பட்டு சென்றபோது கார் மரத்தில் மோதியதில் வக்கீல் பரிதாபமாக இறந்தார்.

மரத்தில் மோதிய கார்

புதுச்சேரி வைசியாள் வீதியை சேர்ந்தர் பிரேம்குமார். நேரு வீதியில் கடை வைத்துள்ளார். இவரது மகன் அக்ஷய் பிரேம்குமார் (வயது 35). வக்கீல். சென்னையில் ஒரு விழாவில் பங்கேற்பதற்காக அவர் இன்று அதிகாலை 4 மணியளவில் காரில் புறப்பட்டு சென்றார். காரை அவரே ஓட்டிச்சென்றார். புதுச்சேரி காமராஜர் சாலையில் பெரியார் சிலை அருகே கார் சென்ற போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது.

இதில் காரின் முன்பக்கம் சேதம் அடைந்தது. அக்ஷய் பிரேம்குமார் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை காந்திவீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.

வக்கீல் சாவு

இதற்கிடையே வீட்டுக்கு திரும்பிய அக்ஷய் பிரேம்குமார் விபத்து நடந்த பதற்றத்துடன் இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அக்ஷய் பிரேம்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இ்து குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்