< Back
புதுச்சேரி
புதுச்சேரி
லாரி அதிபர் தற்கொலை
|13 Sept 2023 9:40 PM IST
மூலக்குளத்தில் கடன் தொல்லையால் லாரி அதிபர் வீட்டில் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மூலக்குளம்
புதுச்சேரி பூமியான்பேட்டை ஐஸ்வரியம் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் கடலூரில் லாரிகள் மூலம் சரக்கு ஏற்றி இறக்கும் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தவறி விழுந்து அடிபட்டு சரியாக நடக்க முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
தொழில் நடத்த கடன் வாங்கியிருந்த நிலையில், அதனை அவரால் திரும்பி செலுத்த முடியவில்லை. கடன் கேட்டவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால் பாஸ்கர் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் அவர் நேற்று இரவு வீட்டில் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கடன் தொல்லையால் அவர் இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.