< Back
புதுச்சேரி
புதுச்சேரி
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
|25 Jun 2023 9:21 PM IST
புதுவை ரெட்டியார்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
மூலக்குளம்
உழவர்க்கரை நகராட்சி ரெட்டியார்பாளையம் மோரிசன் தோட்டத்தில் ஞானாம்பிகை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிந்த நிலையில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து இன்று காலை 4-ம் கால யாகபூஜை, கடம்புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவில் விமான கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவில் தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கர் மற்றும் ரெட்டியார்பாளையம் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.