கிருஷ்ண ஜெயந்தி விழா
|கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை மறுநாள் நடக்கிறது.
புதுச்சேரி
கிருஷ்ணன் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக கொண்டாடுகின்றோம். கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலில் இருந்து பூஜை அறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு புதுவை காந்திவீதியில் வித விதமாக கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். புதுவை பாரதிவீதியில் உள்ள சுந்தரவதன கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை இந்த ஆண்டும் வழக்கம்போல கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.