< Back
புதுச்சேரி
சிறுமியை காதலித்த பெயிண்டருக்கு அடிஉதை
புதுச்சேரி

சிறுமியை காதலித்த பெயிண்டருக்கு அடிஉதை

தினத்தந்தி
|
15 Sept 2023 10:59 PM IST

காரைக்காலில் சிறுமியை காதலித்த பெயிண்டரை அடித்து உதைத்த, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்கால்

காரைக்காலில் சிறுமியை காதலித்த பெயிண்டரை அடித்து உதைத்த, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியை காதலித்த பெயிண்டர்

காரைக்கால் முல்லை நகரைச்சேர்ந்தவர் அரவிந்த்ராஜ் (வயது28). பெயிண்டர். இவர், அப்பகுதியில் உள்ள சிறுமியை (மைனர் பெண்) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த அச்சிறுமியின் உறவினர்கள் அரவிந்த்ராஜை கண்டித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவரும், அச்சிறுமியுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அச்சிறுமியின் உறவினர்கள் மகேந்திரன் (39), ஆகாஷ் (25), ராகேஷ் (22) மற்றும் பிரேம் (25) ஆகியோர் அரவிந்த்ராஜை பார்க்கும் போதெல்லாம் முறைத்து சென்றதாக கூறப்படுகிறது.

அடிஉதை

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவிந்த்ராஜ் தனது நண்பர் நந்தகோபால் மற்றும் சிலருடன் அங்குள்ள சுடுகாடு பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற மேற்கண்ட 4 பேரும், அரவிந்த்ராஜை ஆபாசமாக பேசி அடித்து உதைத்துள்ளனர். தடுக்க வந்த நண்பரையும் தாக்கியுள்ளனர். மேலும் அவரது தாயார் மீனாவையும் 4 பேரும் தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த அரவிந்த்ராஜ் அவரது தாயார் மீனா ஆகியோர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இது குறித்த புகாரின்பேரில், காரைக்கால் நகர போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்