< Back
புதுச்சேரி
ஆக்கிரமிப்பில் இருக்கும் கருமாதி கொட்டகை
புதுச்சேரி

ஆக்கிரமிப்பில் இருக்கும் கருமாதி கொட்டகை

தினத்தந்தி
|
21 July 2023 9:18 PM IST

காரைக்காலில் ஆக்கிரமிப்பில் இருக்கும் கருமாதி கொட்டகையை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட தலித் பழங்குடியின அமைப்புகளின் கூட்டமைப்பினர் தலைமையில் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் 'காரைக்கால் திருநகர், பெரிய பேட், கல்லறைப் பேட், பறவை பேட், எம்.ஜி.ஆர்.நகர், முல்லை நகர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பட்டியலின மக்கள் பயன்படுத்தி வரும் கருமாதி கொட்டகை காரைக்கால் பைபாஸ் சாலையில் உள்ளது. அங்கு நகராட்சி சார்பில் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் செலவில் சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தனிநபர் ஒருவர் கருமாதி கொட்டகையை ஆக்கிரமிப்பு செய்யும் வகையில் சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த விஷயத்தில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்