< Back
புதுச்சேரி
புதுச்சேரி
காரைக்கால் மாணவர்கள் சாதனை
|10 Aug 2023 10:25 PM IST
தென்னிந்திய அளவிலான யோகா போட்டியில் காரைக்கால் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
காரைக்கால்
திருவள்ளூர் கும்மிடிபூண்டியில் தென்னிந்திய அளவிலான யோகா போட்டி நடந்தது. இந்த போட்டியில் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 560 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பொதுப்பிரிவு, முன்வளைதல், பின் வளைதல், நின்ற நிலை, கைபலம், உடலை முறுக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் இந்த போட்டி நடந்தது. இதில் அனைத்து பிரிவுகளிலும் காரைக்காலை சேர்ந்த மாணவி லலிதாம்பிகை முதல் இடத்தை பிடித்து, சாம்பியன் படம் வென்றார். இதேபோல் ராம் திலக், சிவா சித்தார்த், ஜெயனி, வானஜா, ஹரிபிரசாத் உள்ளிட்ட 16 மாணவர்கள் 31 பதக்கங்களை வென்று காரைக்காலுக்கு பெருமை சேர்த்தனர். சாதனை படைத்து காரைக்கால் திரும்பிய மாணவர்களை அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.