காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அதிரடி இடமாற்றம்
|காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அதிரடி இடமாற்றம் செய்யப்ப்ட்டுள்ளார்.
கோட்டுச்சேரி
காரைக்கால் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்தது. ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் காரைக்கால் ஆசிரியர்கள், புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் தேர்ச்சி சதவீதம் குறைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக பள்ளிகளில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் காரைக்கால் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பணியாற்றி வந்த ராஜசேகர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதார். அவர் காரைக்கால் அன்னை தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் திருநள்ளாறு திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி துணை முதல்வர் விஜயமோகனா, காரைக்கால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குனர் (நிர்வாகம்) வெர்பினா ஜெயராஜ் உத்தரவிட்டுள்ளார்.
முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள விஜயமோகனா, மரியாதை நிமிர்த்தமாக காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.