< Back
புதுச்சேரி
புதுச்சேரி
காரைக்கால் நகராட்சி குத்தகை வருவாய் இனங்கள் ஏலம்
|21 July 2023 9:23 PM IST
காரைக்கால் நகராட்சி குத்தகை வருவாய் இனங்கள் ஏலம் விடப்படுகிறது.
காரைக்கால்
காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான கடற்கரை கிழக்கு பகுதி கட்டண கழிப்பிடம் வசூல், புதிய நேரு மீன் மற்றும் உலர் மீன் அடிக்காசு வசூல், புதிய பஸ்நிலை பெட்டிக்கடை வசூல் உள்ளிட்ட பல்வேறு குத்தகை வருவாய் இனங்கள் ஏலம் விடப்படுகிறது. மின்னணு ஏல முறையில் நடைபெறும் இந்த இனங்களின் விவரங்கள், விண்ணப்பத்தொகை, பிணை தொகை, ஏல நிர்ணய தொகை, கேள்வி தொகை ஆகியவற்றை https//eauction.gov.in என்ற இணையதளம் அல்லது காரைக்கால் நகராட்சி அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
ஏலம் கேட்க விருப்பமுடையவர்கள் விண்ணப்ப படிவம், குத்தகை இடங்கள் மற்றும் ஏல நிபந்தனைகளை https//eauction.gov.in என்ற இணையதள முகவரியில் 26-ந்தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம்.