< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வடமறைக்காடு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
|16 July 2023 10:14 PM IST
காரைக்கால் வடமறைக்காடு காமராஜர் அரசு உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்பட்டது.
கோட்டுச்சேரி
காரைக்கால் வடமறைக்காடு காமராஜர் அரசு உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு தலைமையாசிரியை ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மாலை அணிவித்து வணங்கினர். சிறப்பு அழைப்பாளராக எலும்பு முறிவு நிபுணர் டாக்டர் கே.சரவணன் கலந்து கொண்டு ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்காக காமராஜர் செய்த தொண்டினையும், திட்டங்களையும் எடுத்துக் கூறினார்.
விழாவில் பேராசிரியர் ஜெயராமன், முன்னாள் பள்ளி துணை ஆய்வாளர் புத்திசிகாமணி, நாடார் உறவின் முறைத் தலைவர் வலத்தெரு பாஸ்கர், வணிகர் சங்க இணைச் செயலாளர் ராஜ்மோகன், காமராஜர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஜீவானந்தம் உரையாற்றினர். மேலும் மாணவர்களுக்கு எழுதுபொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.