< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கலிதீர்த்தாள்குப்பம் சாலை தற்காலிகமாக சீரமைப்பு
|6 July 2023 10:44 PM IST
திருபுவனை அருகே மதகடிப்பட்டு வழியாக செல்லும் கலிதீர்த்தாள்குப்பம் சாலை சேறும் சகதியுமாக இருந்த நிலையில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
திருபுவனை
திருபுவனை அருகே மதகடிப்பட்டு வழியாக செல்லும் கலிதீர்த்தாள்குப்பம் சாலை ஏற்கனவே மோசமாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மேலும் சேதமடைந்து சேறும் சகதியுமாக மாறியது. இதனால் இந்த வழியாக சென்ற வாகனங்கள் சேற்றில் சிக்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த சாலையை சீரமைக்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், கலிதீர்த்தாள்குப்பம் சாலையை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி சாலையில் உள்ள பள்ளத்தில் மண் கருங்கல் கொட்டப்பட்டு சரிசெய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று சிரமமின்றி சென்று வருகின்றனர். இந்த சாலையை தார் சாலையாக மேம்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.