< Back
புதுச்சேரி
காலாப்பட்டில் வைத்திலிங்கம் எம்.பி. ஆய்வு
புதுச்சேரி

காலாப்பட்டில் வைத்திலிங்கம் எம்.பி. ஆய்வு

தினத்தந்தி
|
9 July 2023 10:11 PM IST

புதுவை காலாப்பட்டில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வைத்திலிங்கம் எம்.பி. ஆய்வு செய்தார்.

காலாப்பட்டு

புதுவை கனகசெட்டிகுளம், பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளை சாவடி ஆகிய மீனவ கிராமங்களில் நேற்று கடல் சீற்றத்தால் கடல்நீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் காலாப்பட்டு பகுதியில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த மீன்பிடி உபகரணங்களை பார்வையிட்டனர். மேலும் பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் அவர்கள் கேட்டறிந்தனர். இந்த நிகழ்வின்போது காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்