ஸ்கூட்டரில் சென்ற தனியார் நிறுவன பெண்ணிடம் நகை பறிப்பு
|புதுவையில் ஸ்கூட்டரில் சென்ற தனியார் நிறுவன பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்,
முத்தியால்பேட்டை
புதுச்சேரி முத்தியால்பேட்டை சூரியகாந்தி நகரை சேர்ந்தவர் சத்யன். இவரது மனைவி புஷ்பாவதி என்ற அபிநயா (வயது 30) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் நகர பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள்.
இன்று காலை புஷ்பாவதி தனது மகளை பள்ளிக்கூடத்திற்கு ஸ்கூட்டரில் அழைத்து சென்றார். காந்திவீதி, எஸ்.வி.பட்டேல் சாலை வழியாக வந்த அவர், போக்குவரத்து சிக்னலுக்காக நிற்க முயன்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி, புஷ்பாவதி கையில் அணிந்திருந்த 1 பவுன் கை சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பாவதி அவரை பின்தொடர்ந்து தனது ஸ்கூட்டரில் சென்றார். அதற்குள் அந்த மர்ம ஆசாமி மின்னல் வேகத்தில் சென்று மறைந்து விட்டார்.
இது குறித்து பிரபாவதி அளித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் வழக்குப்பதிவு செய்து புஷ்பாவதியிடம் நகை பறித்துச்சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்.
பட்டப்பகலில் போக்குவரத்து சிக்னல் பகுதியில் பெண்ணிடம் நகை பறித்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.