< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மது போதையில் ரகளை; 2 பேர் கைது
|24 Sept 2023 10:21 PM IST
முத்திரையர்பாளையம் பகுதியில் மது போதையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூலக்குளம்
முத்திரையர்பாளையம் பகுதியில் இன்று மேட்டுப்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது முத்திரையர் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் காந்தி திருநல்லூரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 35), துரைராஜ் (33) ஆவர்.