புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்புக்கு நாளை நேர்காணல்
|புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்புக்கான நேர்காணல் நாளை சென்டாக் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
காலாப்பட்டு
புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது:-
புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 170-க்கும் மேற்பட்ட காலியாக உள்ள பி.டெக். சுயசார்பு படிப்பிற்கான இடங்களை நிரப்புவதற்கான சென்டாக் மூலம் விண்ணப்பித்துள்ள புதுச்சேரி மற்றும் பிற மாநில மாணவர்களுக்கான நேர்காணல் நாளை (வெள்ளிக்கிழமை) கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் இயங்கும் சென்டாக் அலுவலகத்தில் காலை 10 மணிமுதல் நடைபெற உள்ளது.
இந்த கலந்தாய்வில் வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவில் விண்ணப்பித்திருக்கும் மாணவர்களும் கலந்துகொண்டு சேர்க்கை ஆணை பெறலாம். காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் மாணவர்கள் அந்தந்த பிராந்தியங்களில் உள்ள சென்டாக் அலுவலகங்களில் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்த கலந்தாய்வில் கலந்துகொண்டு சேர்க்கை ஆணை கிடைக்கப்பெற்ற மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக கலையரங்களில் இயங்கும் அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து படிப்பில் சேரலாம்.
இந்த சுயசார்பு பிரிவில் நடத்தப்படும் பாடங்களுக்கு ஆண்டு கட்டணமாக பட்டியலின மாணவர்களுக்கு ரூ.87 ஆயிரத்து 401-ம் பிற மாணவர்களுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 401-ம் செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கலந்தாய்வில் நிரப்பப்பட்டு காலியாக உள்ள இடங்களை உடனுக்குடன் சென்டாக் இணையதளத்தின் யூடியூப் மூலமும தெரிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு சென்டாக் இணையதளம் (https://www.centacpuducherry.in) மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.