< Back
புதுச்சேரி
கஞ்சா நடமாட்டத்தை தடுக்க தீவிர கண்காணிப்பு
புதுச்சேரி

கஞ்சா நடமாட்டத்தை தடுக்க தீவிர கண்காணிப்பு

தினத்தந்தி
|
24 July 2023 10:21 PM IST

கிருமாம்பாக்கம் பகுதியில் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என போலீசார் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

பாகூர்

கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் போலீசார் குறைகேட்பு கூட்டம் மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் முன்னிலை வகித்தார். பணியின்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து போலீசார் தெரிவித்தனர். அனைத்து போலீசாரும் தியானம், யோகா பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு மன உளைச்சல் இன்றி பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள ஆலோசனை கூறப்பட்டது.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில், கிருமாம்பாக்கம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் பள்ளி, கல்லூரி பகுதிகளில் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க வேண்டும். சுற்றுலா பயணிகளை பாதுகாக்க வேண்டும் என்று போலீசாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்