< Back
புதுச்சேரி
புதுச்சேரி
குடிநீர் குழாய் பதிக்கும் பணி தீவிரம்
|27 Aug 2023 9:52 PM IST
காரைக்காலில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோட்டுச்சேரி
காரைக்கால் நகர் பகுதிக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட பழைய குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக காமராஜர் சாலையில் ராஜாஜி நகரில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வரை சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு பொக்லைன் எந்திரம் மூலம் குழிதோண்டி குழாய் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் மதகடிப்பட்டு பைபாஸ் வழியாக புளியங்கோட்டை சாலைக்கு திருப்பி விடப்பட்டது.