< Back
புதுச்சேரி
நகர போலீஸ் நிலையத்தில் சீனியர் சூப்பிரண்டு ஆய்வு
புதுச்சேரி

நகர போலீஸ் நிலையத்தில் சீனியர் சூப்பிரண்டு ஆய்வு

தினத்தந்தி
|
25 July 2023 9:51 PM IST

காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் சீனியர் சூப்பிரண்டு மணீஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இன்று காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு திடீரென சென்று ஆய்வு நடத்தினார். அப்போது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்த அவர், அனைத்து வழக்குகளையும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு உடனுக்குடன் முடிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் போலீஸ் நிலையத்தில் பராமரித்து வரும் குற்றப்பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்