< Back
புதுச்சேரி
காயத்துடன் தவித்த மயில் மீட்பு
புதுச்சேரி

காயத்துடன் தவித்த மயில் மீட்பு

தினத்தந்தி
|
21 July 2023 10:26 PM IST

புதுவை இந்திராகாந்தி மைதானத்தில் காயத்துடன் தவித்த மயில் மீட்கப்பட்டது.

புதுச்சேரி

புதுவை இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று மதியம் மயில் ஒன்று காயத்துடன் பறக்க முடியாமல் தவித்தது. இதை அங்கு வேலை பார்க்கும் ஊழியர் திலாசுப்பேட்டையை சேர்ந்த அப்பு என்பவர் மீட்டு, அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்து வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

இதையடுத்து அந்த மயிலுக்கு வனத்துறையினர் கால்நடை டாக்டரின் உதவியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். காயம் குணமடைந்தவுடன் காட்டுப்பகுதியில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்