< Back
புதுச்சேரி
புதுச்சேரி
முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான அறிமுக விழா
|5 Sept 2023 9:36 PM IST
காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் புதிதாக சேர்க்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான அறிமுக விழா நடைபெற்றது.
காரைக்கால்
காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் புதிதாக சேர்க்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான அறிமுக விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாலாஜி தலைமை தாங்கினார். கல்லூரி பொறுப்பாளர் அம்பிகாதேவி, இயற்பியல் துறைத்தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பல்வேறு பட்டப்படிப்புகளைச் சார்ந்த சுமார் 425 முதல் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர். சமூக வலைதள விழிப்புணர்வு, சாலைப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, ராகிங் எதிர்ப்பு, யோகா, நாட்டு நலப்பணி திட்டங்கள். புதிய கல்விக் கொள்கை, கல்வி உதவித்தொகை, தகவல் தொடர்பு திறன் உள்பட பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்றது.