இந்தியன் வங்கி அணி சாம்பியன்
|5பேர் கொண்ட நமோ ஆக்கி போட்டியில் இந்தியன் வங்கி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
புதுச்சேரி
புதுச்சேரி மாநில பா.ஜ.க. மற்றும் லே புதுச்சேரி ஆக்கி அமைப்பு சார்பில் லாஸ்பேட்டை உள்விளையாட்டு அரங்கத்தில் 5 பேர் கொண்ட நமோ ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 9-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. நேற்று காலை அரை இறுதி போட்டியும், அதில் பெற்றிபெற்ற அணிகளுக்கு மாலையில் இறுதிப்போட்டியும் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் சென்னை இந்தியன் வங்கி - ஜி.எஸ்.டி. மற்றும் கஸ்டம்ஸ் அணிகள் மோதின. இதில் இந்தியன் வங்கி அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 2-வது இடத்தை ஜி.எஸ்.டி. மற்றும் கஸ்டம்ஸ் அணியும், 3-வது இடத்தை மெக் பாய்ஸ் பெங்களூரு அணியும், 4-வது இடத்தை எஸ்.ஆர்.எம். அணியும் பிடித்தன. போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், அசோக் பாபு எம்.எல்.ஏ., புதுவை மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன், பா.ஜ.க. தமிழ் மாநில செயலாளர் சூர்யா ஆகியோர் கலந்துகொண்டு பரிசுக் கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் லே ஆக்கி சங்க சேர்மன் லட்சுமி நாராயணன், தலைவர் செந்தில், பொதுச்செயலாளர் அன்பழகன், துணை தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.