< Back
புதுச்சேரி
புதுச்சேரி

ஏனாம், மாகியில் விடுதலை நாள் கொண்டாட்டம்

தினத்தந்தி
|
1 Nov 2022 10:04 PM IST

ஏனாம், மாகியில் புதுச்சேரி விடுதலை நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அங்கு அமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றினர்.

புதுச்சேரி

ஏனாம், மாகியில் புதுச்சேரி விடுதலை நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அங்கு அமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றினர்.

என்.ஆர்.காங்கிரஸ்

புதுவை விடுதலை நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். மேலும் தலைவர்களின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ஏனாம், மாகி

ஏனாமில் பாலயோகி விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்துகொண்டு தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ., புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடிகிருஷ்ணாராவ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாகியில் நடந்த புதுச்சேரி விடுதலைநாள் விழாவில், அமைச்சர் சாய். சரவணன்குமார் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதில் ரமேஷ் பரம்பத் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி கோர்ட்டு

புதுவை கோர்ட்டில் நடந்த விடுதலை நாள் விழாவில் தலைமை நீதிபதி செல்வநாதன் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல், பொருளாளர் லட்சுமிநாராயணன் உள்பட நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்