< Back
புதுச்சேரி
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
புதுச்சேரி

சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
15 Aug 2022 10:45 PM IST

கண்டமங்கலம், மரக்காணம் பகுதியில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கண்டமங்கலம்

கண்டமங்கலம், மரக்காணம் பகுதியில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சுதந்திர தினம்

நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி ஒன்றியக்குழு தலைவர் ஆர்.எஸ்.வாசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஒன்றியக்குழு துணை தலைவர் நஜீராபேகம் வரவேற்றார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சிவக்குமார், சண்முகம், பொறியாளர்கள் உலகநாதன், அறிவொளி, ஆர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சண்முகம், சுபாஷ்சந்திரபோஸ், மோகன், சுந்தரம், உமா, ராஜா, கீதா, ஜோதி, மாவட்ட கவுன்சிலர்கள் பனிமொழி செல்வரங்கம், தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபாகரன், கணேசன், செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்டமங்கலம் கிராம பஞ்சாயத்தில் பஞ்சாயத்து தலைவர் பிரியதர்ஷினி முருகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இதில் துணைத்தலைவர் பத்மாவதி, ஊராட்சி செயலர் பழனி, வார்டு உறுப்பினர்கள் மணிமேகலை, சதீஷ், குமரேசன், ஜெயபாலன், சாணக்கியர், ஏழையம்மாள், ரஞ்சனி, திவ்யபாரதி மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மரக்காணம் பேரூராட்சி

மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சரவணன், பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் வேதநாயகி ஆளவந்தான் ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

மரக்காணம் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழாவையொட்டி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு தாளாளர் அருணாசலம், பள்ளி துணை தலைவர் ரவிக்குமார் பரிசு வழங்கி பாராட்டினர்.

கோட்டக்குப்பம்

கோட்டக்குப்பம் நகராட்சியில் தலைவர் ஜெயமூர்த்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் நகராட்சி ஆணையர் பானுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்காப்பேரில் ஊராட்சி தலைவர் மாலா சின்னதம்பியும், கோண்டூரில் ஊாராட்சி தலைவர் ஏழுமலையும், பாக்கத்தில் ஊராட்சி தலைவர் கல்யாணியும், தாண்டவமூர்த்தி குப்பத்தில் ஊராட்சி தலைவர் முருகனும், கலித்திரம்பட்டில் ஊராட்சி தலைவர் வனிதா முருகனும், திருமங்கலத்தில் ஊராட்சி தலைவர் மதியழகனும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்