< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை
|28 Sept 2023 12:18 AM IST
தவளக்குப்பம் அருகே உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்தது.
அரியாங்குப்பம்
புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தில் கடலூர் சாலையில் தனியார் கம்யூட்டர் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு கம்ப்யூட்டர் உதிரிபாகங்களை ஒன்று சேர்த்து கம்ப்யூட்டர் தயார் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு இன்று காலை 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் நிறுவனத்தின் நுழைவாயிலை இழுத்து மூடி சோதனை நடத்தினர்.
அப்போது காலை பணிக்கு வந்திருந்த ஊழியர்களின் செல்போன்களை நிர்வாகம் சார்பில் கைப்பற்றி வைக்கப்பட்டது.
மேலும் ஊழியர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு 11 மணியை தாண்டியும் நடைபெற்றது.