< Back
புதுச்சேரி
மருத்துவ கல்லூரிகளில் எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு இடங்கள்?
புதுச்சேரி

மருத்துவ கல்லூரிகளில் எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு இடங்கள்?

தினத்தந்தி
|
16 Sept 2023 11:08 PM IST

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு இடங்கள்? என்ற பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு இடங்கள்? என்ற பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.

52 இடங்கள்

புதுவை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 37 இடங்கள், பல் மருத்துவ படிப்பில் 11 இடங்கள், ஆயுர்வேத படிப்பில் 4 இடங்கள் என 52 இடங்கள் கிடைக்கின்றன.

இதுதொடர்பாக சென்டாக் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 13 இடங்கள் (புதுச்சேரி 9, காரைக்கால் 2, மாகி 1, ஏனாம் 1) கிடைக்கிறது. அதாவது புதுச்சேரி பிராந்தியத்தில் பொதுப்பிரிவினர் 3, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 2, இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு தலா ஒரு இடங்களை பெறுகின்றனர்.

தனியார் கல்லூரிகள்

இதேபோல் தனியார் கல்லூரிகளான பிம்ஸ் மருத்துவக்கல்லூரியில் கிடைக்கும் 6 இடங்களில் பொதுப்பிரிவினருக்கு 3-ம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு தலா ஒரு இடத்தையும் பெறுகின்றனர்.

ஸ்ரீமணக்குள விநாயகர் மருத்துவக்கல்லுரியில் கிடைக்கும் 9 இடங்களில் பொதுப்பிரிவினர் 5, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 2, இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் தலா 1 இடத்தையும் பெறுகின்றனர்.

வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரியில் பெறப்படும் 9 இடங்களில் பொதுப்பிரிவினர் 4, தாழ்த்தப்பட்டோர் 2, இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்பட்டோர் ஆகியோருக்கு தலா 1 இடங்கள் பெறுகின்றனர். அதாவது தனியார் மருத்துவ கல்லூரிகளில் 23 இடங்களை பெறுகின்றனர்.

பல் மருத்துவம்

கோரிமேடு மகாத்மாகாந்தி அரசு பல் மருத்துவக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு இடம் கிடைக்கிறது. அதாவது புதுச்சேரி பிராந்தியத்தில் பொதுப்பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் தலா ஒரு இடத்தையும், காரைக்கால் பிராந்தியத்தில் பொதுப்பிரிவினர் 1 இடத்தையும் பெறுகின்றனர். இதேபோல் தனியார் பல் மருத்துவக்கல்லூரிகளில் 7 இடங்களை அரசுப்பள்ளி மாணவர்கள் பெறுகின்றனர்.

மாகியில் உள்ள ராஜீவ்காந்தி ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரியில் புதுச்சேரி பிராந்தியத்தை சேர்ந்த பொதுப்பிரிவு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என தலா 1 இடமும், காரைக்கால் பொதுப்பிரிவினருக்கு ஒரு இடமும் வழங்கப்படுகிறது. இதேபோல் மருத்துவம் சார்ந்த கூடுதல் படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டு விவரங்களையும் சென்டாக் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்