< Back
புதுச்சேரி
உடனடி மாணவர் சேர்க்கை
புதுச்சேரி

உடனடி மாணவர் சேர்க்கை

தினத்தந்தி
|
22 July 2023 11:31 PM IST

பாகூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உடனடி மாணவர் சேர்க்கை நடைப்பெறுகிறது.

புதுச்சேரி

பாகூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய (ஐ.டி.ஐ.) செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலம் பாகூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பிட்டர் பிரிவுக்கு உடனடி மாணவர் சேர்க்கை (ஸ்பார்ட் அட்மிஷன்) நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் ஆகியவற்றுடன் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

பயிற்சி காலத்தின்போது அனைத்து மாணவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உதவித்தொகை நேரடியாக மாணவரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மேலும் இலவச புத்தகங்கள், சீருடையும், தினமும் தரமான மதிய உணவும் வழங்கப்படும். பயிற்சி காலம் முடிந்ததும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்