< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
|20 April 2023 6:57 PM IST
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை செய்து நோன்பு திறந்தனர்.
புதுச்சேரி,
மதநல்லிணக்க அடிப்படையில் புதுச்சேரி கவர்னர் மாளிகையில் ரமலான் மாதத்தின் போது 'இப்தார்' எனப்படும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.
இதன்படி புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை செய்து நோன்பு திறந்தனர்.
பின்னர் கவர்னர் அளித்த விருந்து நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றனர். இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி, எதிர்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பிரெஞ்ச் துணை தூதர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.