< Back
புதுச்சேரி
மக்களுக்காக மாற்றினால் நீதி நிலை நாட்டப்படும்
புதுச்சேரி

மக்களுக்காக மாற்றினால் நீதி நிலை நாட்டப்படும்

தினத்தந்தி
|
30 July 2023 11:30 PM IST

அரசுக்காக இருக்கும் சட்டத்தை மக்களுக்கான சட்டமாக மாற்றினால் சமூகத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.என். பிரகாஷ் பேசினார்.

காலாப்பட்டு

அரசுக்காக இருக்கும் சட்டத்தை மக்களுக்கான சட்டமாக மாற்றினால் சமூகத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.என். பிரகாஷ் பேசினார்.

புத்தாக்க பயிற்சி

புதுவை காலாப்பட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் போலீசார் மற்றும் வக்கீல்களுக்கான 2 நாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. 2-வது நாள் பயிற்சி மற்றும் நிறைவு நிகழ்ச்சி இன்று நடந்தது. புதுவை சட்டத்துறை செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ் கலந்துகொண்டு பயிற்சியில் கலந்துகொண்ட வக்கீல்கள், போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

சட்டத்தை மாற்றவேண்டும்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அரசு எந்திரங்களை பாதுகாக்கும் வண்ணம் இந்திய காவல் சட்டம் 1861-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் இன்றைய ஜனநாயக சட்டத்திற்கு பொருத்தமற்றது. காவல் துறைக்கு போதிய சுதந்திரமும் அதிகாரமும் வழங்கும் பட்சத்தில் மட்டுமே காவல் துறை மக்களுக்கு சேவை செய்ய முடியும். அரசுக்கான சட்டமாக இருப்பதை மாற்றி மக்களை காக்கும் சட்டமாக மாற்றும் பட்சத்தில் சமூகத்தில் நீதி நிலைநாட்டப்படும்.

இவ்வாறு நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறினார்.

இந்த புத்தாக்க பயிற்சியில் நீதிபதிகள், மூத்த வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். முடிவில் சட்டக்கல்லூரி முதல்வர் சீனிவாசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்