< Back
புதுச்சேரி
குழந்தையிடம் நகை திருடிய கணவன், மனைவி கைது
புதுச்சேரி

குழந்தையிடம் நகை திருடிய கணவன், மனைவி கைது

தினத்தந்தி
|
28 Jun 2023 10:29 PM IST

புதுவையில் வீட்டின் அருகே விளையாடிய குழந்தையிடம் நகை திருடிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்

முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகர் திருநாவுக்கரசர் வீதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 30). இவரது மனைவி சுமித்ரா (27) அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுடைய ஒரு வயது மகன் பிரசன்னா. சம்பவத்தன்று சுமித்ரா தனது மகனுடன் சின்ன வீராம்பட்டினம் வீதி ஓடைவெளியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது குழந்தை பிரசன்னா வீட்டின் அருகில் விளையாடியபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த வாழுமுனி, அவரது மனைவி ஷர்மிளா ஆகியோர் குழந்தையின் கைச்சங்கிலியை திருடியது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து, கணவன், மனைவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தமிழக பகுதியான மேல்மலையனூர் பகுதியில் கணவன், மனைவி இருவரும் கடந்த 10 நாட்களாக பதுங்கி இருந்ததும், தற்போது வீராம்பட்டினம் சந்திப்பு பகுதியில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று கணவன், மனைவி இருவரையும் சுற்றிவளைத்து கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து குழந்தையிடம் திருடிய கைச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்