< Back
புதுச்சேரி
கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் செயல்படுவது எப்படி?
புதுச்சேரி

கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் செயல்படுவது எப்படி?

தினத்தந்தி
|
5 July 2023 10:36 PM IST

காரைக்காலில் கடலில் விபத்துக்குள்ளாகும் கப்பலில் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டால், உடனடியாக செயல்படுவது எப்படி என்பது குறித்து, பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

காரைக்கால்

கடலில் விபத்துக்குள்ளாகும் கப்பலில் திடீரென விபத்து ஏற்பட்டு எண்ணெய் கசிவு ஏற்பட்டால், உடனடியாக செயல்படுவது எப்படி என்பது குறித்து, பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

ஆலோசனை கூட்டம்

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மீட்புத் துறையின் சார்பில், ஒரு கப்பலில் திடீரென விபத்து ஏற்பட்டு எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அதை எவ்வாறு பாதுகாப்பாக கையாள்வது, கடல் நீர், கடல் உயிரினம், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தொந்தரவுகள் ஏற்படாத வகையில், மீட்பு பணியை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன், அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் பயிற்சி கலெக்டர் சம்யக்ஜெயின், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு (தெற்கு) சுப்ரமணியன் துணை கலெக்டர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன், இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மீட்பு படையினர் ஒத்திகை

தொடர்ந்து, காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் பட்டினச்சேரி கடற்கரையில், விபத்து ஏற்பட்ட கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது போல் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணமும், தண்ணீரில் வாழும் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும் அந்த எண்ணையை பிரித்து எடுக்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு ஒத்திகை நடத்திக் காட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் காவல்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை, மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட தன்னார்வலர் மீட்பு குழு மற்றும் ஆப்தமித்ரா குழுவினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்