< Back
புதுச்சேரி
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
புதுச்சேரி

சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தினத்தந்தி
|
2 July 2023 10:58 PM IST

புதுவையில் தியாகி அன்சாரி துரைசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் தியாகி அன்சாரி பெ.துரைசாமியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி மகாத்மா காந்தி வீதி-சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.க் கள் ரமேஷ், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல் பா.ம.க. சார்பில் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்